கூடாரவல்லி உற்ஸவம்
பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் மார்கழியில் அதிகாலையில் திருப்பாவை பாடப்படுகிறது. மார்கழி மாதம் 27ம் நாள் ஆண்டாள் பெருமாளுடன் சேர்க்கையானார். இந்நிலையில் 100 தடாவில் வெண்ணெய், 100 தடா அக்காராவடிசில் படைப்பதாக ஆண்டாள் வேண்டி இருந்தார்.இதனை நிறைவேற்றும் வகையில் பின்நாளில் ராமானுஜர் வேண்டுதலை அழகருக்கு செய்ததாக ஐதீகம். இதன்படி பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் இரவு கூடாரவல்லி உற்ஸவம் நடந்தது. ராப்பத்து விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.