தை அமாவாசை: பக்தர்களுக்கு சேதுக்கரையில் அடிப்படை வசதி
திருப்புல்லாணி : திருப்புல்லாணி அருகேயுள்ள சேதுக்கரையில் தைஅமாவாசையை முன்னிட்டு வரும் பக்தர்களுக்கு தேவையான கழிப்பறை, குடிநீர் ஆகிய அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுகிறது.தை, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை சிறப்பு உடையது. இந்நாட்களில் சேதுக்கரை ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் அருகே உள்ள கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் சங்கல்ப பூஜைகளை செய்வதற்காக ராமநாதபுரம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் புனித நீராடுவதற்காக சேதுக்கரை வருகின்றனர்.இதன்படி ஜன.,29ல் தை அமாவாசையை முன்னிட்டு சேதுக்கரை ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் கழிப்பறை வசதி கடற்கரை ஓரத்தில் மின்வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் நடக்கிறது.