உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தங்கச்சிமடம் சந்தியாகப்பர் சர்ச் திருவிழா கொடிஏற்றம்

தங்கச்சிமடம் சந்தியாகப்பர் சர்ச் திருவிழா கொடிஏற்றம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் உள்ள சந்தியாகப்பர் சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.தங்கச்சிமடம் வேர்க்காடு கிராமத்தில் உள்ள புனித சந்தியாகப்பர் சர்ச் 483ம் ஆண்டு திருவிழாவையொட்டி நேற்று மாலை சர்ச் முன்புள்ள கொடி கம்பத்தில் சிவகங்கை மறை மாவட்ட முதன்மை குரு அருள்ஜோசப் திருவிழா கொடியை ஏற்றினார். இதில் தங்கச்சிமடம் புனித தெரசாள் சர்ச் பாதிரியார் ஆரோக்கியராஜா, விழாக் குழு தலைவர் ஜேம்ஸ் அமல்ராஜ், மும்மத சமுதாய நிர்வாகிகள், இறைமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.இதனைத் தொடர்ந்து ஜூலை 25 வரை சர்ச் வளாகத்தில் நற்கருணை ஆராதனை பூஜைகள் நடக்கும். ஜூலை 24 மாலை சர்ச் வளாகத்தில் அலங்கரித்த தேரில் சந்தியாகப்பர் எழுந்தருளி ஊர்வலமும், திருவிழா திருப்பலி பூஜையும் நடக்கும். ஜூலை 25ல் காலை திருவிழா சிறப்பு திருப்பலி பூஜை முடிந்ததும் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை