கமிஷனர் பொறுப்பேற்பு
பரமக்குடி: பரமக்குடியில் கமிஷனராக இருந்த தாமரை, அம்பாசமுத்திரம் நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய கமிஷனர் சங்கர் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு நகராட்சியில் கமிஷனராக இருந்துள்ளார். இரண்டாம் நிலை நகராட்சியில் இருந்து, தற்போது முதல் நிலையாக உள்ள பரமக்குடி நகராட்சிக்கு பதவி உயர்வில் வந்துள்ளார். இவரை நகராட்சி தலைவர் சேது கருணாநிதி, துணைத் தலைவர் குணா, வார்டு கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் வாழ்ந்தினர்.