உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட ஸ்தானிகர் சிறையில் அடைப்பு 

 போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட ஸ்தானிகர் சிறையில் அடைப்பு 

ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் ரூ.1 கோடி மதிப்பிலான சுவாமி நகைகள் மோசடி வழக்கில் ஒரு நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட ஸ்தானிகர் சீனிவாசன் விசாரணைக்கு பின் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் ரூ.1 கோடி சுவாமி நகைகள் மாயமானது. திவான் பழனிவேல் பாண்டியன் புகாரில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நகைகளின் பொறுப்பாளர் கோயில் ஸ்தானிகர் சீனிவாசன் மீது வழக்குப்பதிந்தனர்.உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சீனிவாசன் முன் ஜாமின் மனு தாக்கல் செய்தார். முதலில் நிபந்தனை முன் ஜாமின் வழங்கப்பட்டது. கோயில் நகைகள் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்றம் அமைத்த ஆணையம் அறிக்கையை தொடர்ந்து இடைக்கால முன் ஜாமின் ரத்து செய்யப்பட்டது.தலைமறைவாக இருந்த சீனிவாசன் ராமநாதபுரம் மாஜிஸ்திரேட் எண் -2ல் சரணடைந்தார். அவர் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.குற்றப்பிரிவு போலீசார் சீனிவாசனை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டனர். ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி மாஜிஸ்திரேட் வெர்ஜின்வெஸ்டா உத்தரவிட்டார்.சீனிவாசனிடம் விசாரித்ததில், நகை மாயமானதற்கு நான் காரணமல்ல. எனக்கு முன்பு பணி செய்தவர்கள் தான் காரணம். நான் பலிகடா ஆக்கப்பட்டேன் என தெரிவித்துள்ளார்.போலீஸ் காவல் நிறைவு பெற்றதால் சீனிவாசனை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். அவரை மீண்டும் சிறையிலடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ