உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காட்சிப்பொருளாக உள்ள ஆழ்குழாய் தண்ணீர் தொட்டி

காட்சிப்பொருளாக உள்ள ஆழ்குழாய் தண்ணீர் தொட்டி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி சார்பில் கீரைக்காரத் தெருவில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் தண்ணீர் தொட்டி பயன்பாடின்றி காட்சிப் பொருாளாக உள்ளது. ராமநாதபுரம் சின்னக்கடை வீதிக்கு செல்லும் வழியில் வேளாண் துணை இயக்குநர் (வணிகம்) அலுவலகம் மற்றும் ரேஷன் கடைக்கு வரும் மக்கள் பயன் பெறும் வகையில் கீரைக்காரத்தெருவில் ரூ. பல லட்சம் செலவில் ஆழ்குழாய் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இது பல மாதங்களாக பயன்பாடில்லாமல் திருகு குழாய்கள் துருபிடித்து சேதமடைந்துள்ளன. அரசின் நிதி வீணடிக்கப்பட்டுள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே ஆழ்குழாய் தண்ணீர் தொட்டியை சீரமைத்து அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை