உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பன் நெடுஞ்சாலை பாலத்தில் இன்று மீனவர்கள் மறியல் பேச்சுவார்த்தை தோல்வி

பாம்பன் நெடுஞ்சாலை பாலத்தில் இன்று மீனவர்கள் மறியல் பேச்சுவார்த்தை தோல்வி

ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நடந்த ஆர்.டி.ஓ., பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் அறிவித்தபடி இன்று(நவ.12) பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் மறியல் நடக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர்.இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் மறியல் நடத்துவோம் என அறிவித்தனர். இதையடுத்து நேற்று ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செல்லப்பா தலைமையில் மீனவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.அதன் பின் ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., ராஜமனோகரன் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்ததால் இன்று காலை திட்டமிட்டபடி பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் மறியல் நடக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர். இதனால் இன்று பாம்பனில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ