இருள் சூழ்ந்த ஆர்.எஸ்.மங்கலம் மருத்துவமனை முகப்பு பகுதி
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசு மருத்துவமனை முகப்பு பகுதியில் மின்விளக்குகள் இன்றி இருள் சூழ்ந்துள்ளதால் இரவில் மருத்துவமனை செல்லும் நோயாளிகள் அச்சமடைகின்றனர்.நுாறுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஆர். எஸ்.மங்கலம் மையப்பகுதியாக திகழ்வதால் ஆர்.எஸ். மங்கலத்தில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவமனையின் நுழைவு வாயில் பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது.இதனால் இரவு நேரத்தில் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனை வரும் நோயாளிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மருத்துவமனை முகப்பு பகுதியில் கூடுதல் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் வலியுறுத்தினர். மேலும், மருத்துவமனையில் எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.