உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கொண்டுநல்லான்பட்டியில் 6 மாதங்களாக எரியாமல் உள்ள உயர் கோபுர மின்விளக்கு

கொண்டுநல்லான்பட்டியில் 6 மாதங்களாக எரியாமல் உள்ள உயர் கோபுர மின்விளக்கு

சாயல்குடி: சாயல்குடி அருகே கொண்டு நல்லான்பட்டி ஊராட்சியில் ஆறு மாதங்களுக்கும் மேலாக உயர் கோபுர மின்விளக்கு எரியவில்லை. கொண்டு நல்லான்பட்டியில் 3000 பேருக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இங்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட உயர் கோபுர மின்விளக்கு எரியாமல் காட்சி பொருளாக உள்ளது. தற்போது ஊராட்சி நிர்வாகத்தை தனி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் மூலம் நிர்வகித்து வரும் நிலையில் ஊராட்சியின் வளர்ச்சிப் பணியில் அக்கறை காட்டாத நிலையில் கடலாடி யூனியன் நிர்வாகத்தினர் உள்ளனர். சமீபத்தில் நடந்த கோயில் திருவிழாவில் ஹைமாஸ் விளக்கு வெளிச்சமின்றி இருந்ததால் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வந்தோம். தொகுதி அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. உயர் கோபுர மின்விளக்கை சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை