உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 10 மாதங்களாக மழைநீர் வாறுகாலை சீரமைக்காத நெடுஞ்சாலைத்துறையினர் பொதுமக்கள் அவதி

10 மாதங்களாக மழைநீர் வாறுகாலை சீரமைக்காத நெடுஞ்சாலைத்துறையினர் பொதுமக்கள் அவதி

சாயல்குடி : சாயல்குடி பேரூராட்சி மாதா சர்ச் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை ஒட்டியுள்ள பகுதிகளில் பத்து மாதங்களாகியும் சேதமடைந்த வாறுகாலை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைக்காமல் உள்ளனர்.கடந்த 2023 டிச.,ல் மழை வெள்ள நீர் சாயல்குடி நகர் பகுதியில் புகுந்ததால் மழைநீர் செல்வதற்காக சாயல்குடி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் கால்வாய் வழியாக மழைநீர் செல்வதற்கு வழி ஏற்படுத்தப்பட்டது.இதனால் 1 கி.மீ.,க்கு கிழக்கு கடற்கரை சாலையின் பிரதான வலது மற்றும் இடது பகுதிகளில் வாறுகால் தற்போது வரை 10 மாதங்களுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் சேதமடைந்துள்ளது.கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்லும் போது விபத்து அபாயம் உள்ளது.கட்டுமான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதால் இடிபாடுகளுடன் வாறுகால் உள்ளது. எனவே கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சேதமடைந்த வாறுகாலுக்கு உரிய முறையில் திட்ட மதிப்பீடு தயாரித்து புதிதாக மூடியுடன் கூடிய வாறுகால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை