மேலும் செய்திகள்
விதிமீறிய 47 கடைகளுக்கு ரூ.77 ஆயிரம் அபராதம்
16-Mar-2025
சாயல்குடி : கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு நாள்பட்ட பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதால் அதனை சாப்பிடுவோருக்கு உடல் நலக் குறைபாடு ஏற்படுகிறது.மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்டவைகளில் காலாவதியான உணவுப் பொருள்களை கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். தன்னார்வலர்கள் கூறியதாவது:பொதுவாக நகர்ப்புறங்களில் உள்ள சூப்பர் மார்க்கெட், மளிகை கடை போன்ற இடங்களில் காலாவதியான பொருட்கள் அதிகளவு பயன்பாட்டில் உள்ளது. அவற்றின் தயாரிப்பு தேதி உள்ளிட்டவைகள் குறித்த போதிய விழிப்புணர்வு இன்றி கிராம மக்கள் அவற்றை அதிகளவு வாங்குகின்றனர்.டீக்கடை, ஓட்டல்களில் எண்ணெய் பலகாரங்கள் விற்பனை செய்யப்படும் நிலையில் அவற்றை பல மாதங்களாக சல்லடை மூலம் வடிகட்டி மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வருகின்றனர். இதனை உண்பதால் உடலுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவச் செலவுக்கு வழிவகுக்கிறது.எனவே நாள்பட்ட எண்ணெயை பயன்படுத்தி நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் கடைகளை சோதனை செய்து மாதிரி எடுத்து விதியை மீறுவோருக்கு உரிய முறையில் அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பை மற்றும் புகையிலை விற்பனையும் தொடர்கிறது. எனவே இவற்றை ஒழுங்குபடுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
16-Mar-2025