உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாவட்டத்தின் கடைசி கிராமத்திற்கு பஸ் தேவை: 25 ஆண்டு கோரிக்கை

மாவட்டத்தின் கடைசி கிராமத்திற்கு பஸ் தேவை: 25 ஆண்டு கோரிக்கை

சாயல்குடி: கடலாடி ஒன்றியம் எஸ்.தரைக்குடி அருகே வி.சேதுராஜபுரம், அன்னபூர்வ நாயக்கன்பட்டி, முத்துராமலிங்கபுரம், வெள்ளையாபுரம், கரிசல்குளம், செஞ்சடைநாதபுரம், பிச்சையாபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு 25 ஆண்டுகளாக பஸ் வசதி இல்லாத நிலை தொடர்ந்து வருகிறது.பா.ஜ., அரசு தொடர்பு மாவட்ட செயலாளர் முத்து வல்லாயுதம் கூறியதாவது: 25 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் டவுன் பஸ் மற்றும் புறநகர் பஸ் வசதி இல்லை. மாவட்டத்தின் கடைசி எல்லை பகுதி கிராமமான வி.சேதுராஜபுரத்தில் இருந்து பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பஸ் வசதி இதுவரை இல்லை.இதனால் மருத்துவமனை, பள்ளி, கல்லுாரிகளுக்கு மற்றும் அவசர அத்தியாவசிய தேவைகளுக்கு தனியார் வாடகை வாகனங்களில் பயணிக்கும் நிலை தொடர்கிறது. எனவே சாயல்குடியில் இருந்து எஸ்.தரைக்குடி மார்க்கமாக கிராமங்களுக்கு செல்வதற்கு அரசு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து வசதி இல்லாததால் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றோம்.சாயல்குடி, கடலாடி உள்ளிட்ட நகர் பகுதிகளுக்கு செல்ல 15 கி.மீ.,க்கு வாடகை வாகனங்களில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் 25 ஆண்டுகளுக்கு முன்பு இயங்கிய பஸ்சை மீண்டும் இப்பகுதியில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து கலெக்டருக்கும் புகார் மனு அனுப்பி உள்ளேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை