கோயிலில் திருடியவர் கைது
ராமநாதபுரம்:-ராமநாதபுரம் அருகே குயவன்குடி வெட்காளியம்மன் கோயிலில் பூட்டை உடைத்து அம்மன் அணிந்திருந்த 3 பவுன் நகையை திருடியவரை போலீசார் கைது செய்தனர். இக்கோயிலில் டிச.2ல் பூட்டை உடைத்து உண்டியல் பணம், 3 பவுன் அம்மன் நகைகளை மர்ம நபர் திருடிச் சென்றார். கோயில் நிர்வாகி சேதுபதிநகர் துரைக்கண்ணன், கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். விசாரணையில் தினமும் மது அருந்தி மகிழ்ச்சியில் திளைத்த வாலாந்தரவை அம்மன் கோயில் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் மகன் மதன் 20, என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அம்மன் நகைகளை திருடியதை மதன் ஒப்புக்கொண்டார். மது அருந்த பணம் இல்லாததால் பணம் திருடியதாக தெரிவித்தார். அவரை கைது செய்த போலீசார் 3 பவுன் நகையை மீட்டனர்.