உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பழுதடைந்த வாகனத்தை ஓரம் கட்டிய பேரூராட்சி நிர்வாகம்

பழுதடைந்த வாகனத்தை ஓரம் கட்டிய பேரூராட்சி நிர்வாகம்

கமுதி: கமுதி பேரூராட்சி சார்பில் குப்பை கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்ட வாகனத்தை முறையாக பராமரிக்கப்படாததால் பழுதடைந்து தற்போது ஓரங்கட்டப்பட்டுள்ளது.கமுதி பேரூராட்சி 15 வார்டுக்கு உட்பட்ட 50க்கும் மேற்பட்ட தெருக்கள் மற்றும் கடைகளில் பயன்படுத்தப்படும் குப்பை மற்றும் கழிவுகளை எடுத்து செல்வதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் வாகனங்கள் வழங்கப்பட்டது. இதன் மூலம் பேரூராட்சி ஊழியர்கள் குப்பையை பிரித்து கொண்டு வந்தனர்.இந்நிலையின் வாகனத்தை முறையாக பராமரிக்கப்படாமல் கடந்த சில மாதத்திற்கும் மேலாக பேரூராட்சி அலுவலகம் அருகே வாகனம் ஓரம் கட்டப்பட்டுள்ளது.இதனால் அரசின் நிதி வீணடிக்கப்படுகிறது. தற்போது கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பை கொண்டு செல்வதற்கு போதுமான வாகனங்கள் இல்லாமல் பணியாளர்கள் சிரமப்படுகின்றனர்.இதனால் குப்பை தேங்கும் நிலை உள்ளது. எனவே கமுதி பேரூராட்சியில் பழுதடைந்த வாகனத்தை பராமரித்தும் மேலும் புதிய வாகனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை