முடங்கிய பட்டா சிட்டா சர்வர் செயல்பாட்டுக்கு வந்தது
ஆர்.எஸ்.மங்கலம்: நேற்று முன்தினம் முழுவதும் முடங்கி இருந்த பட்டா சிட்டா சர்வர் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக நேற்று பயன்பாட்டிற்கு வந்தது. விவசாயி களின் நில உரிமை தொடர்பான விவரங் களை பார்வையிடும் இ-சர்வீஸ் சர்வர் மூலம் பட்டா மாறுதல், புலப்பட விவரங்களை பார்வை யிடுதல், பட்டா சிட்டா நகல் எடுத்தல், பதிவேடு விவரங்களை பார்வையிடுதல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் பெறப்படுகின்றன. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இந்த சர்வர் முடங்கியதால் பட்டா சிட்டா உள்ளிட்ட பல்வேறு சேவைகளை விவசாயிகள் பெற முடியாமல் பாதிப்புக்குள்ளாயினர். குறிப்பாக விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெற்பயிர்களுக்கு நவ.,15க்குள் பயிர் இன்சூரன்ஸ் பதிவு மேற்கொள்ள காலக்கெடு விதித்துள்ள நிலையில் பயிர் இன்சூரன்ஸ் பதிவுக்கு முக்கிய ஆவணமான பட்டா சிட்டா நகல் எடுக்க முடியாமல் விவ சாயிகள் நேற்று முன்தினம் முழுவதும் பாதிப்பு அடைந்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலி யாக நேற்று காலை முதல் முடங்கிய இ-சர்வீஸ் பட்டா சிட்டா சர்வர் வழக்கம் போல் இயங்கியது. இதனால், பயிர் இன்சூரன்ஸ் மேற்கொள்ளும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.