உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு மாதிரி பள்ளி அமைக்கும் திட்டம் கிடப்பில்: இடமின்றி வாடகை கட்டடத்தில் செயல்படும் அவலம்

அரசு மாதிரி பள்ளி அமைக்கும் திட்டம் கிடப்பில்: இடமின்றி வாடகை கட்டடத்தில் செயல்படும் அவலம்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2021 ல் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு மாதிரி பள்ளி ரூ.56 கோடியில் மாணவிகள், மாணவர்களுக்கு தனித்தனியாக தங்கும் விடுதிகள், நவீன கம்ப்யூட்டர் லேப், அறிவியல் ஆய்வங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளனர். அதற்குரிய 7 ஏக்கர் இடம் கிடைக்கவில்லை. இதனால் ராமநாதபுரத்தில்தனியார் பொறியியல் கல்லுாரியில் செயல்பட்டது. அங்கும் இடமின்றி தற்போது நடப்பு ஆண்டு முதல் ராமநாதபுரம் அருகே முத்துபேட்டை தனியார் பள்ளி வளாகத்தில் வாடகை கட்டடத்தில் செயல்படுகிறது. இதனால் அரசு நிதி ரூ. பல லட்சம் வீணடிக்கப்படுகிறது. அரசு மாதிரிப் பள்ளியில் 9 முதல் பிளஸ் 2 வரை 425 மாணவர்கள் வரை படிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம், கல்வித்துறையினர் இணைந்து விரைவில் 7 ஏக்கர் இடத்தை தேர்வு செய்து அரசு மாதிரி பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தினர். கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், அரசு மாதிரி பள்ளிக்கான 7 ஏக்கர் இடத்தை வருவாய்த்துறை மூலம் பார்வையிட்டு வருகிறோம். நடப்பு ஆண்டில் இடம் தேர்வு செய்து வரும் கல்வி ஆண்டில் பணிகள் துவங்க வாய்ப்பு உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி