உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 15 ஆண்டாக சீரமைக்கப்படாத ரோடு

15 ஆண்டாக சீரமைக்கப்படாத ரோடு

கீழக்கரை: ஏர்வாடி ஊராட்சி ஏர்வாடி தர்காவில் இருந்து சேர்மன் தெரு, காட்டுப்பள்ளி, முத்தரையர் நகர், ஏராந்தரவை போன்ற கிராமங்களுக்கு செல்லும் பிரதான ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் சேறும் சகதியாக மாறுவதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். ஏராந்தரவை கிராம மக்கள் கூறியதாவது:ஏர்வாடி ஊராட்சியில் இப்பகுதி முழுமையாக புறக்கணிக்கப்படுகிறது. 15 ஆண்டுகளாக ரோடு வசதியின்றி பெரும் சிரமத்தை சந்திக்கிறோம். ரோடு முழுவதும் மண்மேவியுள்ளது. எனவே குறைகளை நிவர்த்தி செய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ