மழைக்கு மரம் சாய்ந்தது
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலத்தில் நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து மழை பெய்தது. நேற்று அதிகாலை முதல் மதியம் 12:00 மணி வரை விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.இந்நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் டவுன் காந்தி வீதியில் மரம் வேருடன் ரோட்டில் சாய்ந்ததில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் மின்தடை ஏற்பட்டதுடன் வாகன போக்குவரத்தும் தடைபட்டது. அதைத் தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த மின்வாரிய ஊழியர்கள், மின் இணைப்பை துண்டித்து சாய்ந்த மரக் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்து மின்விநியோகம் வழங்கினர்.