மேலும் செய்திகள்
எமனேஸ்வரத்தில் நடந்த சீதாராமன் திருக்கல்யாணம்
09-Apr-2025
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் பங்குனி திருக்கல்யாண நிறைவு விழாவில் பூப்பல்லக்கில் பெருமாள் வீதி உலா வந்தார்.பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம் நடந்தது. ஏப்.,11 காலை 10:25 மணிக்கு சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் திருக்கல்யாணம் நிறைவடைந்து விவாஹ சடங்குகள் 5 நாட்கள் நடந்தது.இதன்படி ஏப்.,14ல் பெருமாள், தாயார் மாற்றுத் திருக்கோலத்தில் இருந்தனர். நேற்று முன் தினம் இரவு 7:00 மணிக்கு பெருமாள் அமர்ந்த திருக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் வீதி உலா வந்தார்.l எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பெருந்தேவி தாயார், வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு பூப்பல்லக்கில் தாயாருடன் பெருமாள் வீதி உலா வந்தார். ஏராளமானவர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
09-Apr-2025