உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / எமனேஸ்வரத்தில் நடந்த சீதாராமன் திருக்கல்யாணம்

எமனேஸ்வரத்தில் நடந்த சீதாராமன் திருக்கல்யாணம்

பரமக்குடி : பரமக்குடி அருகே எமனேஸ்வரம் ஆஞ்சநேய பெருமான் கோயில் ராமநவமி விழாவில் சீதாராமன் திருக்கல்யாணம் நடந்தது.தினமும் மூலவர் மற்றும் உற்ஸவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு சீதா ராமன் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து நேற்று இரவு 7:00 மணிக்கு சீதாராமன் திருமண கோலத்தில் அலங்காரமாகி பூப்பல்லக்கில் வீதிவலம் வந்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை