உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பஸ் வரல.. அடிப்படை வசதிகள் இன்றி அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் அவதி

பஸ் வரல.. அடிப்படை வசதிகள் இன்றி அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் அவதி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சியில் உள்ள நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் குடிநீர், கழிப்பிட வசதி, டவுன் பஸ் வசதியின்றி மக்கள் சிரமப்படுகின்றனர்.பட்டணம்காத்தான் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் நுாற்றுக்கு மேற்பட்டவர்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் அடுக்குமாடி குடியிருப்பில் 2016ம் ஆண்டு முதல் தற்போது வரை 15 பிளாக்குகளில் 500 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு அடிப்படை வசதிகள் முழுமையாக செய்து தரவில்லை. குடிநீர் வருவது இல்லை.கழிவுநீரை அகற்ற வழியில்லை. டவுன் பகுதிக்கு சென்றுவர பஸ் வசதியில்லை. எனவே அடிப்படை வசதிகள் மற்றும் டவுன் பஸ் வசதி செய்துதர கலெக்டர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி