உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மழைநீரில் மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க திருவாடானை விவசாயிகள் வலியுறுத்தல்

மழைநீரில் மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க திருவாடானை விவசாயிகள் வலியுறுத்தல்

திருவாடானை : திருவாடானை தாலுகாவில் மழைநீரில் மூழ்கிய பயிர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முத்துராமு கூறியதாவது: திருவாடானை தாலுகாவில் ஒரு லட்சம் ஏக்கரில் நெல் விவசாயம் நடக்கிறது. கடந்த செப். மாதம் முதல் விதைப்பு பணி துவங்கியது. 15 நாட்கள் மழை இல்லாமல் விதைகள் காய்ந்தன. அதைத் தொடர்ந்து மழை பெய்து பயிர்கள் முளைத்து விவசாயிகள் களைக்கொல்லி மருந்து தெளித்து இருந்தனர்.கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் மங்களக்குடி, புல்லுார் பிர்காவில் உள்ள கண்மாய்கள் நிரம்பி உள்ளன. இதனால் கண்மாய் பகுதியில் உள்ள புஞ்சை நிலங்களில் உள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. மேலும் நஞ்சை நிலங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் விவசாயிகள் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க அரசுக்கு பரிந்துரை செய்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை