மேலும் செய்திகள்
எம்.பி., ராஜேஸ்குமாருக்கு முதல்வர் வாழ்த்து
15-Aug-2025
திருவாடானை: மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குவதில் ராமநாத புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் திருவாடானை மத்திய கூட்டுறவு வங்கி தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் மகளிர் திட்டம் சார்பில் வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்பத்தை சேர்ந்த பெண்களைக் கொண்ட சுய உதவிக் குழுக்கள் அமைக்கபட்டுள்ளது. இக்குழுக்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி, தனிநபர் கடன், குழு கடன் மற்றும் வங்கி கடன் வழங்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 32 மத்திய கூட்டுறவு வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகளில் மகளிர் குழுக்களுக்கு அதிக நிதி வழங்கிய வங்கி குறித்து ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்படும். இந்த ஆண்டு ஆய்வில் 88 குழுக்களுக்கு திரு வாடானை மத்திய கூட்டுறவு வங்கி ரூ.7.74 கோடி வழங்கி முதலிடம் பிடித்து உள்ளது. நேற்று முன்தினம் ராமநாதபுரத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் வங்கி மேலாளர் சந்திரசேகருக்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். வங்கி மேலாளர் சந்திரசேகர் கூறுகையில், மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார தேவையை கருத்தில் கொண்டு அவைகளின் தடையற்ற செயல்பாடுகளுக்காக வங்கி கடன்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் மாவட்டத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளில் திருவாடானை மத்திய கூட்டுறவு வங்கி மூன்று ஆண்டுகளாக அதிக நிதி வழங்கி முதலிடத்தில் உள்ளது என்றார்.
15-Aug-2025