மேலும் செய்திகள்
மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
20-May-2025
ராமநாதபுரம்; -ராமநாதபுரம் சொக்கநாதசுவாமி கோயிலில் மங்களநாதர் சிவனடியார் மற்றும் அனைத்து சிவனடியார்கள் திருக்கூட்டங்கள் இணைந்து திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியை ராமநாதபுரம் தேவஸ்தான சமஸ்தான நிர்வாக செயலாளர் திவான் பழனிவேல்பாண்டியன் துவங்கி வைத்தார். மனோகர குருக்கள், ரமேஷ் குருக்கள் தலைமை வகித்தனர். உத்தரகோசமங்கை பகுதி அலுவலர் பாண்டியன் முன்னிலை வகித்தார். திருவாசக முற்றோதல் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மதியம் அன்னதானம் நடந்தது.
20-May-2025