மேலும் செய்திகள்
திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி
25-Sep-2025
சாயல்குடி : சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் பவளநிறவல்லி அம்மன் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. ராமநாதபுரம் சமஸ் தானத்திற்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் நேற்று காலை முதல் மதியம் 3:00 மணி வரை திருவாசகம் முற்றோதல் நடந்தது. உற்ஸவ மூர்த்தி களுக்கு அபிஷேக அலங்காரத்தில் தீபாராதனைகள் நடந்தது. கோயில் பிரகார மண்டபத்தில் திருவாசகம் விண்ணப்பம் பாடல்கள் இசையுடன் பாடப்பட்டது. ஏராளமான சிவனடியார்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பவளம் மகளிர் குழு, மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டியினர் செய்தனர்.
25-Sep-2025