உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருவெற்றியூர்-வீரசங்கிலிமடம் ரோடு சேதம்

திருவெற்றியூர்-வீரசங்கிலிமடம் ரோடு சேதம்

திருவாடானை: திருவெற்றியூர்-வீரசங்கிலிமடம் ரோடு சேதமடைந்துள்ளதால் விபத்துக்கள் அதிகரித்துள்ளது.திருவாடானை அருகே திருவெற்றியூரிலிருந்து வீரசங்கிலிமடம் 3 கி.மீ.,ல் உள்ளது. இந்த ரோடு ஆங்காங்கே சேதமடைந்துஉள்ளது. இதனால் டூவீலர்களில் செல்பவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் ரோடாக இருப்பதால் டூவீலர் மற்றும் வாகனங்களில் அதிகளவில் செல்கின்றனர். இரவில் ரோட்டோரமாக செல்லும் போது பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்துக்கள் ஏற்படுகிறது. ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி