உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொண்டி மணிமுத்தாறு பாலம் பளிச்  

தொண்டி மணிமுத்தாறு பாலம் பளிச்  

தொண்டி : தொண்டி மணிமுத்தாறு பாலத்தில் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக மின் விளக்கு அமைக்கப்பட்டது.தொண்டி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே மணிமுத்தாறு பாலம் உள்ளது. மதுரை-தொண்டி, ராமநாதபுரம்- பட்டுக்கோட்டை செல்லும் வகையில் அமைந்துள்ளதால் 24 மணி நேரமும் ஏராளமான வாகனங்கள் இப்பாலத்தின் வழியாக செல்கின்றன. பாலம் அருகே குடியிருப்பவர்கள் கடைகளில் பொருட்கள் வாங்கிக் கொண்டு இப்பாலத்தின் வழியாக நடந்து வீடுகளுக்கு செல்வார்கள்.பாலத்தின் இருபக்கமும் மின்விளக்கு எரியவில்லை. இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டது. தொண்டி மாலிக் கூறுகையில், இரவில் பாலத்தின் வழியாக வீட்டிற்கு நடந்து செல்லும் போது போதிய வெளிச்சம் இன்றி பெண்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். எனவே பாலத்தின் இரு புறங்களிலும் மின் விளக்குகள் எரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.இதுகுறித்த செய்தி தினமலர் நாளிதழில் படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியாக தொடர்ந்து மின் விளக்கு எரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை