உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொண்டி பேரூராட்சி கவுன்சில் கூட்டம்

தொண்டி பேரூராட்சி கவுன்சில் கூட்டம்

தொண்டி; தொண்டி பேரூராட்சி கூட்டம் தலைவர் ஷாஜகான் பானு தலைமையில் நடந்தது. கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதலாக டாக்டர்கள் நியமிக்க வேண்டும். தொண்டி கூட்டு குடிநீர் திட்டத்தில் பாரூர், கோவனி ஆழ்துளை கிணற்றில் உள்ள மின்மோட்டார், மின் அழுத்த பெட்டி அடிக்கடி பழுதாவதால் குடிநீர் சப்ளையில் தடை ஏற்படுகிறது. இதனை மின்வாரிய அலுவலர்கள் சரி செய்ய வேண்டும். மணிமுத்தாறு முகத்துவாரம் முதல் சிற்றாறு வரை முட்செடிகளை அகற்றி பூங்கா அமைக்க வேண்டும் போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ