சாய்ந்த நிலையில் மின்கம்பம்
திருப்புல்லாணி: -: திருப்புல்லாணி அருகே தினைக்குளம் செல்லும் சாலையில் கடந்த இருநாட்களாக சாலையோரத்தில் இருந்த மின்கம்பம் வாகனம் மோதியதில் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் விபத்து அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் நடுவதற்கு ரெகுநாதபுரம் துணை மின் நிலையம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.