உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு பஸ் மோதி டைம் கீப்பர் பலி

அரசு பஸ் மோதி டைம் கீப்பர் பலி

தேவிபட்டினம்,: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த டைம்கீப்பர் ராமு 55, அரசு பஸ் மோதியதில் பலியானார். ஆர்.எஸ்.மங்கலம் அருகே கொத்தியார் கோட்டையைச்சேர்ந்தவர் ராமு. இவர் தேவிபட்டினம் பஸ் ஸ்டாண்டில், டைம் கீப்பராக இருந்தார். ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடி சென்ற அரசு பஸ் நேற்று காலை 10:00 மணிக்கு தேவிபட்டினம் பஸ் ஸ்டாண்ட் வந்தது. முன்னதாக அங்கு நின்ற வேறொரு அரசு பஸ் டிரைவரிடம் ராமு பேசிக்கொண்டிந்தார். அப்போது பரமக்குடி பஸ் மோதியதில் ராமு பலியானார். தப்பியோடிய எஸ்.காவனுாரைச் சேர்ந்த கந்தசாமியை 59, தேவிபட்டினம் போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி