மின்கசிவால் தீப்பற்றி எரிந்த பஞ்சர் கடை
சிக்கல்: -வாலிநோக்கத்தில் பஞ்சர் கடையில் ஏற்பட்ட மின் கசிவால் அங்கிருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.சிக்கல் அருகே வாலிநோக்கம் கிழக்கு கடற்கரைச் சாலை ஓரத்தில் பஞ்சர் கடை வைத்திருப்பவர் மணி. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு சிமெண்ட் கூரையிலான பஞ்சர் கடையில் எதிர்பாராமல் மின் கசிவு ஏற்பட்டதில் கடையில் இருந்த டியூப், டயர் உள்ளிட்ட தளவாட பொருள்களின் மீது தீப்பற்றியது. இதில் பொருட்கள் எரிந்து சாம்பலானது. ஏர்வாடி தீயணைப்பு நிலைய மீட்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர். வாலிநோக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.