உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு

டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு மையங்களில் டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வை 3630 எழுத உள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு செப்., 7, 11 முதல் 18 வரையும் மற்றும் செப்.,22 முதல் 27 வரை என 16 நாட்கள் இணைய வழித் தேர்வாக ராமநாதபுரம், பரமக்குடி மற்றும் கீழக்கரை ஆகிய இடங்களில் நான்கு மையங்களில் நடைபெறவுள்ளது. இத்தேர்வை 3630 பேர் எழுத உள்ளனர். தேர்வு மையங்களில் தடையில்லா மின்சார வசதி, இணைய வசதி மற்றும் அனைத்து தேர்வு மையங்களுக்கும் சென்றுவர போதுமான அளவு பஸ் வசதிகள் மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை