உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விபத்துக்களை தவிர்க்க ரூ. 20 லட்சத்தில் ராமேஸ்வரம் ரோட்டில் ஒளிரும் விளக்கு

விபத்துக்களை தவிர்க்க ரூ. 20 லட்சத்தில் ராமேஸ்வரம் ரோட்டில் ஒளிரும் விளக்கு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்களை தவிர்க்க ரூ.20 லட்சத்தில் ஒளிரும் விளக்கு துாண்கள் அமைக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதில் ராமேஸ்வரம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பாக ராமநாதபுரம் முதல் ராமேஸ்வரம் வரை 58 கி.மீ.,ல் பல இடங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனைத் தடுக்க எஸ்.பி., சந்தீஷ் உத்தரவின் பேரில் மாவட்ட போக்குவரத்து காவல்துறையினர் ஏற்பாட்டில் ஓ.என்.ஜி.சி., நிறுவனம் மூலம் ரூ. 20 லட்சத்தில் ராமேஸ்வரம் முதல் ராமநாதபுரம் வரை இரவு, பகலில் ஒளிரும் விளக்கு துாண்கள் 10 இடங்களில் தலா 2 வீதம் 20 சிக்னல் விளக்குகள் அமைத்துள்ளனர். இந்த விளக்குகள் இருளில் பிரகாசமாக ஒளிர்வதால் 80 சதவீதம் விபத்துக்கள் குறைந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !