உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புகையிலை பொருட்கள் பறிமுதல் சகோதரர்கள் உட்பட 3 பேர் கைது

புகையிலை பொருட்கள் பறிமுதல் சகோதரர்கள் உட்பட 3 பேர் கைது

திருப்புல்லாணி : ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே 700 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக அண்ணன், தம்பி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்புல்லாணி அருகே தினைக்குளம் ஊராட்சி அத்தியட்சபுரம் கிராமத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த வழியாக சென்ற மினி சரக்கு வாகனத்தை சோதனையிட்டனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட 700 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அதில் தொடர்புடைய பெரியபட்டினத்தைச் சேர்ந்த சகோதரர்கள் செய்யது இப்ராகிம் 42, செய்யது ஜமால் 38, மற்றும் சேலத்தை சேர்ந்த வேன் டிரைவர் ராஜா 39, ஆகியோரை கைது செய்தனர்.புகையிலை பொருட்களை அத்தியட்சபுரத்தில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்து அங்கிருந்து திருப்புல்லாணி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் விற்க திட்டமிட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ