அபிராமத்தில் புகையிலை விற்பனை: 2 கடைக்கு சீல்
கமுதி; கமுதி அருகே அபிராமம் பகுதியில் புகையிலை விற்பனை செய்த 2 கடைகளுக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து சீல் வைக்கப்பட்டது.அபிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் பேரில் பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள முனீஸ்வரன், இந்து பஜாரில் உள்ள மைதீன் நைனார் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மூலம் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் முன்னிலையில் புகையிலை விற்பனை செய்த முனீஸ்வரன் மீது வழக்குப்பதிந்து இருப்பதால் ரூ.25 ஆயிரம்,மைதீன் நயினார் கடைக்கு 2 முறை வழக்குப்பதிந்து இருப்பதால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து சீல் வைக்கப்பட்டது. எஸ்.ஐ., ராஜ்குமார், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இருந்தனர்.