மேலும் செய்திகள்
ராமநாதபுரத்தில் டெங்கு இருவர் அனுமதி
05-Nov-2025
ராமநாதபுரம்: தமிழக போலீஸ் துறையில் 3655 இரண்டாம் நிலை போலீஸ் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று (நவ.9) நடக்கிறது. இத்தேர்வுக்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி, செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி, கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லுாரி, பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி, கே.ஜே.இ.எம்., மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 6522 ஆண்கள், 1344 பெண்கள் என 7866 பேர் தேர்வு எழுத உள்ளனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய அதிகாரிகள், மாவட்ட எஸ்.பி., தலைமையில் தேர்வு கண்காணிக்கப்படுகிறது.இந்நிலையில் நேற்று ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியில் போலீசாருக்கு தேர்வு நடத்தும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர். தேர்வு எழுத வருபவர்கள் காலை 8:00 முதல் 9:30 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். தேர்வுக்கூடத்திற்குள் வாட்ச், கால்குலேட்டர், அலைபேசி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. ஹால்டிக்கெட் மற்றும் ஏதேனும் ஒரு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கொண்டு செல்ல வேண்டும் என தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
05-Nov-2025