உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பேரிடர் பாதிப்பு குறித்து  தகவல் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1077

பேரிடர் பாதிப்பு குறித்து  தகவல் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1077

ராமநாதபுரம்: மாவட்டத்தில் பேரிடர் பாதிப்புகள் குறித்து 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் 24 மணி நேரமும் தகவல் தெரி விக்கலாம். வடகிழக்கு பருவ மழைக்காலங்களில் புயல், மழை மற்றும் வெள்ளத்தை எதிர் கொள்ளும் பொருட்டு வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட அளவில் நடந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் செப்.,24ல் நடந்தது. இதில் துறை களுக்கு பேரிடர்கள் தொடர்பாக உரிய முன்னேற்பாடு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து தகுந்த அறிரைகள் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பேரிடர் பாதிப்பு குறித்த தங்களது கோரிக்கைகளை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு மையத்திற்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-ல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மைப்பிரிவு தொலைபேசி 04567-- 230 060 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை