/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பன் பாலத்தில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்
பாம்பன் பாலத்தில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வாகனங்களை பாம்பன் பாலத்தில் தாறுமாறாக நிறுத்தினர். அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பிற வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. மக்கள் பெரிதும் பாதித்தனர். மேலும் 37 வயது கடந்த பாம்பன் பாலம் பலமிழந்து வரும் நிலையில் கனரக வாகனங்களை நிறுத்துவதால் பாலத்தில் விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பாம்பன் பாலம் மற்றும் மக்கள் நலன் கருதி பாலத்தில் வாகனங்களை நிறுத்துவதை போலீசார் தடுக்க வேண்டும்.