/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழக்கரை பஸ் ஸ்டாண்ட் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல்; பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் போக்குவரத்து நெரிசல்
கீழக்கரை பஸ் ஸ்டாண்ட் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல்; பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் போக்குவரத்து நெரிசல்
கீழக்கரை: கீழக்கரை நகராட்சி பஸ் ஸ்டாண்ட் செல்லக்கூடிய சாலையின் இருபுறங்களிலும் கட்டுமான பணிகளுக்காக தோண்டப் பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக கீழக்கரை நகர் பகுதிக்குள் வரக்கூடிய பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் பஸ் ஸ்டாண்ட் செல்லும் வழியில் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் கூறியதாவது: கீழக்கரை பஸ் ஸ்டாண்ட் செல்லும் வழியில் தோண்டப்பட்டுள்ள மெகா பள்ளம் மற்றும் கட்டுமான பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் பெரும் சிக்கல் நிலவுகிறது. இதனால் காலை மாலை நேரங்களில் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே அப்பகுதியில் கூடுதல் போலீசாரை நியமித்து போக்கு வரத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.