உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  தேசிய ஹாக்கி போட்டி செல்லும்  மாணவிகளுக்கு பயிற்சி நிறைவு

 தேசிய ஹாக்கி போட்டி செல்லும்  மாணவிகளுக்கு பயிற்சி நிறைவு

ராமநாதபுரம்: தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் பங்கேற்க செல்லும் தமிழ்நாடு அணியினருக்கு பயிற்சி நிறைவடைந்தது. தேசிய அளவிலான 19 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான ஹாக்கி போட்டி மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் ஜன.,2 முதல் 8 வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் தமிழ்நாடு அணியினருக்கு ராமநாதபுரம் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. வேலுமாணிக்கம் செயற்கை இழை ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் டிச.,26 முதல் 30 வரை பயிற்சி நடந்தது. பயிற்சி முடிந்து குவாலியர் செல்லும் மாணவிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி, ஹாக்கி பயிற்சியாளர் மணிகண்டன், உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !