உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆசிரியர்களுக்கு பயிற்சி 

ஆசிரியர்களுக்கு பயிற்சி 

திருவாடானை : மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன்படிப்பு உதவித்தொகை திட்டத்தில் (என்.எம்.எம்.எஸ்) அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப் படுகிறது. ஒன்பது முதல் பிளஸ் 2 வரை மாதம் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் இத் திட்டத்திற்கு தேர்வு நடத்தப்படுவதால் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி வழங்கும் ஆசிரியர்களுக்கு நேற்று முன்தினம் திருவாடானை அரசு பெண்கள் பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டது. 40 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். வட்டார கல்வி அலுவலர் ஆரோக்கியசாமி துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை