பெண் ஊழியர்களுக்கு தனி கழிப்பறை கோரி போக்குவரத்து ஊழியர்கள் இன்று போராட்டம்
ராமநாதபுரம் : அனைத்து போக்கு வரத்து பணிமனைகளிலும் பெண் ஊழியர் களுக்கு தனி ஓய்வறை, கழிப்பறை அமைத்துக் கொடுக்க வேண்டும், என போக்குவரத்து பணியாளர்கள் இன்று (ஆக.18) காத்திருப்பு போராட்டம் நடத்தவுள்ளனர். காரைக்குடி மண்டல பொதுச்செயலாளர் பாஸ்கரன் கூறியதாவது: போக்குவரத்து துறையில் நிர்வாக பிரிவு மட்டுமின்றி டிரைவர், கன்டக்டர் போன்ற பணி களிலும் பெண்கள் அதிகம் பணிபுரிகின்றனர். முக்கிய பணிமனைகளில் நிர்வாகப் பிரிவில் பெண்கள் பணிபுரிவதால் தனி கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. புறநகர், சிறு பணிமனைகளில் அனைத்து பணியாளர்களுக்கும் ஒரே இடத்தில் கழிப்பறை அமைக்கப்பட்டுள் ளது. இதனால் பெண்கள் கழிப்பறை செல்ல தயக்கம் காட்டுகின்றனர். இதனால் அனைத்து பணிமனைகளிலும் பெண்களுக்கு என பிரத்யேக ஓய்வறை, கழிப்பறை ஏற் படுத்தி தர வேண்டும். இதனை வலியுறுத்தி காரைக்குடி மண்டல அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம், அரசு போக்குவரத்து ஓய்வுபெற்ற ஊழியர்கள் நல அமைப்பு சார்பில் ஆக.18காத்திருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.