உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குழந்தைகள் காப்பகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

குழந்தைகள் காப்பகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

ராமநாதபுரம்; ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் 'யாதும் உயிரே' என்ற தலைப்பில் குழந்தைகள் காப்பகங்களில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 7 அரசு மற்றும் அரசு சாரா குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் ஆங்கிலபுத்தாண்டை முன்னிட்டு இல்ல வளாகத்திற்குள் தலா 10 மரக்கன்றுகள் குழந்தைகளால் நடப்பட்டு மரக்கன்றுகளை சுற்றி மரக்கன்று வேலி அமைக்கப்பட்டது. இதில் குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.ராமநாதபுரம் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் வனச்சரக அலுவலர் அப்துல் ரகுமான், வனவர் நசிருதீன், குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் உள்ள நிர்வாகிகள் குழந்தைகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை