திருச்சி சிவா எம்.பி.,யை கண்டித்து உண்ணாவிரதம்
பரமக்குடி; பரமக்குடி காந்தி சிலை முன்பு அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை சார்பில் காமராஜரை இழிவுபடுத்தி பேசிய திருச்சி சிவா தி.மு.க., எம்.பி., யை கண்டித்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை மாநில துணைத்தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ரஞ்சித் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் செல்வராஜ் வரவேற்றார். பா.ஜ., மாவட்ட தலைவர் முரளிதரன் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் வக்கீல் சண்முகநாதன், குமார், நகர் தலைவர் சுரேஷ்பாபு உட்பட பலர் பேசினர். முன்னாள் முதல்வர் காமராஜரை தி.மு.க., எம்.பி., சிவா இழிவு படுத்தி பேசியதற்கு கண்டனம் தெரிவித்தனர். இளைஞர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.