மேலும் செய்திகள்
தனுஷ்கோடி கடலில் மூழ்கி மீனவர் பலி
24-Sep-2025
ராமேஸ்வரம்:இரு நாட்களாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசுகிறது. தனுஷ்கோடி, பாம்பன், மன்னார் வளைகுடா கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தன. அரிச்சல்முனை கடற்கரை, முகுந்தராயர் சத்திரத்தில் உள்ள மீன் இறக்கும் பாலம் மீது ஆக்ரோஷமாக அலைகள் மோதி பல அடி உயரத்திற்கு மேலே எழுந்தது.தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணிகள் மீது சாரல் மழை போல் கடல் அலை துளிகள் விழுந்தன. சூறாவளியால் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்வில்லை.
24-Sep-2025