மேலும் செய்திகள்
வலையில் சிக்கிய ஆமை மீட்பு
21-Nov-2024
ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடற்கரையில் இறந்த ஆமை கரை ஒதுங்கியது. ராமேஸ்வரம் பாக்ஜலசந்தி, தனுஷ்கோடி மன்னார் வளைகுடா கடலில் அலுங்காமை, சித்தாமை, பச்சை ஆமை, தோணி ஆமைகள் வசிக்கின்றன. இந்த ஆமைகள் டிச., முதல் ஏப்., வரை கடற்கரையில் குழி தோண்டி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வது வழக்கம். சமீப நாட்களாக பல ஆமைகள் உயிரிழந்து கரை ஒதுங்குகின்றன.நேற்று மண்டபம் முனைக்காடு கடற்கரையில் 3 அடி நீளம், 2 அடி அகலம் கொண்ட 40 கிலோ எடையுள்ள ஆமை உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியது. இது இனப்பெருக்கத்திற்காக கரை நோக்கி வந்த போது படகு அல்லது பாறையில் மோதி அல்லது தடை செய்த வலையில் மீனவர்கள் மீன்பிடித்த போது சிக்கி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.இந்த ஆமையை கால்நடை டாக்டரின் பரிசோதனைக்கு பிறகு வனத்துறையினர் கடற்கரையில் புதைத்தனர். ஆமைகள் உயிரிழப்பு குறித்து வனத்துறையினர் ஆய்வு செய்து பாதுகாக்க வேண்டும்.
21-Nov-2024