ராமநாதபுரத்தில் 1.34 டன் ரேஷன் அரிசி பறிமுதல் இருவர் கைது
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் மினி சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 1.34 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்தனர்.ராமநாதபுரத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கேணிக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனிப்பிரிவு எஸ்.எஸ்.ஐ., சிவா மற்றும் போலீசார் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி அருகே வந்த மினி சரக்கு வாகனத்தை சோதனையிட்டனர். அதில் 40 கிலோ கொண்ட 35 ரேஷன் அரிசி மூடைகளை கடத்தி செல்வது தெரிய வந்தது. ரேஷன் அரிசி, சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து மினி சரக்கு வாகனத்தின் டிரைவர் தஞ்சாவூரை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கணேஷ்பாபு 42, திருப்புல்லாணியை சேர்ந்த சந்தவழியான் மகன் அஜித்குமார் 28, என தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.