உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் அருகே இருதரப்பினர் மோதல் இருவர் கைது; போலீஸ் குவிப்பு 5 பேரை தேடி வருகின்றனர் 

ராமநாதபுரம் அருகே இருதரப்பினர் மோதல் இருவர் கைது; போலீஸ் குவிப்பு 5 பேரை தேடி வருகின்றனர் 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே இளமனுார் பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பெண் உட்பட 3 பேர் காயமடைந்தனர். 2 பேரை போலீசார் கைது செய்தனர். 5 பேரை தேடுகின்றனர். போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இளமனுார் மேற்கு பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் முனீஸ்வரன் 24. ஏ.சி., மெக்கானிக். இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடித்து டூவீலரில் வீடு திரும்பினார். அப்போது இளமனுார் பகுதியில் ரோட்டின் மையப்பகுதியில் அமர்ந்து சிலர் மது அருந்திக்கொண்டிருந்தனர். வழி இல்லாததால் ஹாரன் அடித்துள்ளார்.ஒதுங்கி வழி விடாததால் ஒரு ஒரமாக டூவீலரை ஓட்டி வீடு சென்றுள்ளார். மது அருந்தியவர்கள் முனீஸ்வரன் வீட்டிற்கு வந்துள்ளனர். எப்படி ஹாரன் அடிக்கலாம் என தகராறு செய்து அடுப்பு ஊதும் இரும்பு குழலை கொண்டு முனீஸ்வரனை தாக்கினர்.இதைப்பார்த்த உறவினர்கள் ராஜ்குமார் மனைவி நாகலட்சுமி, நாகராஜன் மகள் அபிநயா ஆகியோர் தகராறை விலக்கிவிட வந்தனர். அவர்களையும் அந்த நபர்கள் தாக்கி காயப்படுத்தினர். காயமடைந்தவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதனால் இளமனுார் பகுதியில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் மோதல் ஏற்படாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முனீஸ்வரன் புகாரில் கேணிக்கரை போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து இளமனுார் நடுத்தெரு ராமு மகன் காளீஸ்வரன் 37, சுப்பிரமணியன் மகன் சிவக்குமார் 35, ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.நடுத்தெரு தெட்சிணாமூர்த்தி மகன் தீபக், மலைராஜ் மகன் ஜெகதீஷ், முனியசாமி மகன் பாபு, பத்மநாதன் மகன் மணி, ராஜா மகன் சிவரத்தினம் ஆகிய 5 பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ