உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராட்டினம் உடைந்து இரு சிறுவர்கள் காயம்

ராட்டினம் உடைந்து இரு சிறுவர்கள் காயம்

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சித்திரை திருவிழா நடக்கும் நிலையில் சிறிய ரக ராட்டினத்தின் கார் உடைந்து விழுந்ததில் இரு சிறுவர்கள் காயம் அடைந்தனர்.பரமக்குடி வைகை ஆற்றில் சித்திரை திருவிழா நடக்கும் நிலையில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவின் அடிப்படையில், அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ராட்டினம் இயக்கப்பட்டது. நேற்று மாலை சிறிய ரக ராட்டினத்தில் சிறுவர்கள் அமர்ந்து சுற்றினர். அப்போது திடீரென ராட்டினத்தின் ஒரு கார் மட்டும் உடைந்து விழுந்தது.இதில் பரமக்குடி முத்தாலம்மன் கோயில் படித்துறை பாண்டி மகன்கள் டார்வின் 4, மருது 10, ஆகிய சிறுவர்களுக்கு முகத்தில் லேசான காயம் ஏற்பட்டது. இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை