ராமநாதபுரத்தில் டூவீலர் சுடர் ஊர்வலம்
ராமநாதபுரம்: தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதி கோரி டூவீலர் சுடர் ஊர்வலம் நடந்தது.கன்னியாகுமரியில் மே 15ல் துவங்கி செஞ்சி கோட்டையில் மே 18ல் நிறைவு பெற உள்ளது. இந்த ஊர்வலம் நேற்று ராமநாதபுரத்தில்நடந்தது. இதில் டூவீலரில் சுடர் ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாநில இளைஞரணி செயலாளர் புலேந்திரன் முருகானந்தம் தலைமையில் நடந்தது.